தேசிய ஊரக உறுதித்திட்ட மாவட்ட குறை தீர்ப்பாளர் நியமனம் -ஆட்சியர்
நியமனம்;
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27ஆவது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக பி.திருமலைசாமி தஞ்சாவூர் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய கைப்பேசி எண் 8925811326 மற்றும் மின்னஞ்சல் முகவரி ombudsnregsthanjavur@gmail.com ஆகும். பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.