ஓசூர்: பைனான்ஸ் ஊழியர் கொலை- நான்கு பேர் கைது.
ஓசூர்: பைனான்ஸ் ஊழியர் கொலை- நான்கு பேர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரகாரம் கிராமத்தைச் சேர்ந்த ராமரெட்டி மகன் பைனான்ஸ் ஊழியர் வெங்கட்ராஜ் (32) என்பவர் மற்றொரு தரப்பினருக்கும் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக நேற்று அக்ரஹாரம் பஸ் நிலையத்தில் 9 பேர் சுற்றி வளைத்து கொலை செய்தனர். இதுகுறித்து ஓசூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் சிறுவன் உட்பட 3 பேர் போலீசாரிடம் சரணடைந்தனர். ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 4-ங்கு பேரை போலீசாரிடம் சிக்கிய நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வெங்கட்ராஜுக்கு பிரியங்கா என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ரிஷிப்பவன் என்ற மகனும் உள்ளனர்.