குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி அலுவலகம் முன்பு மிகப் பழமை வாய்ந்த நகராட்சி பூங்கா உள்ளது. இது தற்போது பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்த பூங்காவில் குழந்தைகளை மகிழ்ச்சியடைய செய்யும் வகையில் மேலும் அதிகமான விளையாட்டு பொருட்கள் பொருத்தி கூடுதல் வசதி செய்ய வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து குழித்துறை நகராட்சி சார்பில் ரூ 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அலங்கார நீர் ஊற்று, ஊஞ்சல், மினி விமானம், விளையாட்டுப் பொருள்கள் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் புனரமைக்கப்பட்ட பூங்காவை குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி நேற்று திறந்து வைத்தார். நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.