வெம்பக்கோட்டை அருகே பட்டாசு கழிவுகளால் காட்டுப்பகுதியில் திடீர் தீ விபத்து-உடனடியாக தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தன
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு கழிவுகளால் காட்டுப்பகுதியில் திடீர் தீ விபத்து-உடனடியாக தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்*.;
சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு கழிவுகளால் காட்டுப்பகுதியில் திடீர் தீ விபத்து-உடனடியாக தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் கம்பி மத்தாப்பு பட்டாசு ஆலை செயல்படுகிறது. ஆலையின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பட்டாசு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. அங்கு கொட்டப்பட்டுள்ள பட்டாசு கழிவுகள் அதிக வெப்பத்தின் காரணமாக திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. வெயிலில் காய்ந்த செடிகள் முட்புதர்களில் தீ பரவத் தொடங்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.