வாங்கல்- கணவன் மனைவி சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து. பெண் படுகாயம்.
வாங்கல்- கணவன் மனைவி சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து. பெண் படுகாயம்.;
வாங்கல்- கணவன் மனைவி சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து. பெண் படுகாயம். கரூர் வெங்கமேடு அருகே ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி பூங்கொடி வயது 45. இருவரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் வாங்கல் - மோகனூர் சாலையில் டூவீலரில் வாங்கல் செக்போஸ்ட் அருகே சென்றபோது அதே சாலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு தெருவை சேர்ந்த நிதிஷ்குமார் வயது 22 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் செல்வராஜ் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த பூங்கொடிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பூங்கொடியின் மகள் ரஞ்சிதா வயது 26 அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய நிதீஷ் குமார் மீது வாங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.