வாணியம்பாடி அருகே காதல் விவகாரத்தில் அரிவாள் வெட்டு போலீஸ் விசாரணை!
வாணியம்பாடி அருகே காதல் விவகாரத்தில் அரிவாள் வெட்டு போலீஸ் விசாரணை!;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காதல் விவகாரத்தில் காதலனின் தந்தையை அரிவாளால் வெட்டிய பெண்ணின் தந்தை மருத்துவமனையில் அனுமதி கிராமிய போலீசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் இவரது மகன் சஞ்செய் (வயது 22) இவர் மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவரது மகளான கார்த்திகா (வயது 20) என்பவரை காதலித்து வரும் நிலையில், சுதாகருக்கு இந்த காதல் விவகாரம் தெரிய வர காதலை கைவிடும்படி சஞ்ஜெயிடம் சுதாகர் கூறிய நிலையில் காதலை சஞ்ஜெய் கைவிடாததால், இன்று உதயேந்திரம் பகுதியில் சஞ்ஜெயை கொலை செய்ய அவரது வீட்டிற்கு சென்ற சுதாகர், சஞ்ஜெய் வீட்டில் இல்லாததால், சஞ்ஜெயின் தந்தையான கார்த்திகை அரிவாளால் தலை, முகம், கை சரமாரியாக வெட்டியுள்ளார், இதில் படுகாயமடைந்த கார்த்திக் உடனடியாக அங்கிருந்தவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர் தலைமறைவாக உள்ள சுதாகரை போலீசார் தேடி வருகின்றனர்.