முருகன் கோவில் அருகே நடந்து சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.

முருகன் கோவில் அருகே நடந்து சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.;

Update: 2025-08-27 11:15 GMT
முருகன் கோவில் அருகே நடந்து சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. கரூர் மாவட்டம் தாந்தோணி மலை குமரன் சாலை 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி வயது 70. இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று கரூர் - பாளையம் சாலையில் தாந்தோணிமலை முருகன் கோவில் எதிரே நடந்து சென்ற போது , அடையாளம் தெரியாத டூவீலர் ஒன்று பெரியசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து பெரியசாமியின் உறவினர் நகுலன் அளித்த புகாரில் தாந்தோணிமலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News