வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் வடிவில் அமர்ந்து அசத்திய பள்ளி மாணவர்கள்
வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் வடிவில் அமர்ந்து அசத்திய பள்ளி மாணவர்கள்;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் வடிவில் அமர்ந்து அசத்திய பள்ளி மாணவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிகரம் நகர் பகுதியில் சிகரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிஇயங்கி வருகிறது.இதில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் விநாயகர் உருவ சிலை வைத்து ஆசிரியர்கள் மாணவர்கள் சாமி கும்பிட்டனர். அப்போது விநாயகர் வடிவிலான ஓவியம் வரையப்பட்டு அதில் 6 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விநாயகர் வடிவில் அமர்ந்து விநாயகர் சதுர்த்தியை மாணவர்கள் கொண்டாடி அசத்தினர்.