ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மூத்த குடிமகன் கோரிக்கை மனு

கீழக்கரையை சேர்ந்த மூத்த குடிமகன் எஸ்.எம்.எச்.அப்துல்லா சாகிபு என்பவரது 99 செண்ட நிலத்திற்கான பட்டாவை அதிகாரிகள் ரத்து செய்து விட்டதாக கூறி மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலுவிடம் கோரிக்கை மனு அளித்தார்.;

Update: 2025-08-27 11:51 GMT
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்த எஸ்.எம்.எச்.அப்துல்லா சாகிபு(72) மூத்த குடிமகனான இவர். கீழக்கரை தாலுகாவுக்கு உட்பட்ட காஞ்சிரங்குடி குரூப் பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான 99 செண்ட் நிலம் பட்டாவாக உள்ளது. இவரது வாழ்வதாரமாக இருந்து வந்த நிலத்தை அவர்களது உறவினர்கள் துணையோடு அதிகாரிகள் பட்டாவை ரத்து செய்து விட்டதாக கூறி பாதிக்கப்பட்ட எஸ்.எம்.எச்.அப்துல்லா சாகிபு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலுவிடம் கோரிக்கை மனு அளித்தார். தனது கடைசி வாழ்க்கைக்கான வாழ்வாதாரமாக உள் இடத்திற்கு ரத்து செய்யப்பட்ட பட்டாவை முன்பு இருந்தது போல இருந்த தனது பெயரிடம் பாட்டா வழங்கிட கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

Similar News