ராமநாதபுரம் கோவில் திருவிழா நேத்திக்கடன் செலுத்திய பக்தர்
திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் 5 கரகம் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி தலையில் வைத்தி பிடிக்காமல் 20 கிலோ மீட்டர் தூரம் கண்மாய், வயல் வெளி வழியாக வரும் அதிசய நிகழ்வ பன்னெடும் காலமாக இன்றும் நடந்துவருகிறது;
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே இளமனி கிராமத்தில் இங்கு ஸ்ரீ இருளையா ஸ்ரீ பூமாரியம்மன், ஸ்ரீ கழுவடி கருப்பன் உள்ளிட்ட கோயில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த ஆகஸ்ட் 20 ம் தேதி புதன் கிழமை காப்புக் கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று நம்புதாளை முருகன் கோவில் முன்பு உள்ள கடலில், குளித்துவிட்டு கடல் தண்ணீரை 5 கரகங்களில் எடுத்து தலையில் ஏந்தி, சாலைகள் வழியாக வராமல் கண்மாய்கள், வயல் காடுகள் வழியாக குறுக்காக வந்து திருவடிமிதியூர் வந்து மீண்டும் கரகங்கள் அழங்கரித்து இங்கிருந்து மீண்டும் இளமனி கோவிலுக்கு வயல்வெளியாக சென்று கோவிலை அடைவர். இது பன்னெடும் காலம் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. அப்படி கரகம் எடுத்து நடந்து நடந்து வரும் பொழுது 3 க்கும் மேற்பட்ட கண்மாய்கள், 80 க்கும் மேற்பட்ட வயல் வரப்புகளை கடந்து வர வேண்டும் இப்படி வரும் பொழுது கரகத்தினை கையில் பிடிப்பதில்லை என்பது தனி சிறப்பு.கோவிலை வந்து அடைந்ததும் கரகம் இறக்கிவைக்கப்பட்டு மீண்டும் கோவிலில் இருந்து கரகம் எடுத்து கல்லூர், மாங்குடி, இளமனி கிராமங்களுக்கு சென்று அருள்பாலித்து திரும்புவது இன்றும் நடந்து வருகிறது. இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்