ராமநாதபுரம் சாலை விபத்தில் இருவர் பலி
ஆர் எஸ் மங்களம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு;
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அருகே கலக்குடி திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்து விட்டு தங்களது சொந்த ஊரான புதுக்கோட்டை நோக்கி தட்சிணாமூர்த்தி என்பவர் காரை ஓட்டி வந்த நிலையில் ஆர்எஸ் மங்கலம் களக்குடி விலக்கு ரோடு அருகே கார் சென்று கொண்டிருந்த போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பாலத்தில் மோதி கார் கவிழ்ந்ததில் காரில் இருந்த தேவராஜ் மற்றும் ஓட்டுநர் தட்சணாமூர்த்தி ஆகிய இருவரும் காயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரது உடலும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து ஆர் எஸ் மங்களம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.