கோவை அரசு மருத்துவர்கள் சாதனை: துண்டான கையை ஒட்டிய சிகிச்சை வெற்றி !
குடும்பத் தகராறில் துண்டான கையை ஒட்டி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.;
பொள்ளாச்சி பகுதியில் குடும்பத் தகராறில் வலது கை துண்டான தங்கமணி (30) என்பவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் 5 மணி 30 நிமிடங்கள் தொடர்ந்து சிகிச்சை செய்து, நரம்புகள், தசைகள், தமனி, சிறைகளை இணைத்து கையை வெற்றிகரமாக ஒட்டியுள்ளனர். தற்போது தங்கமணி உடல் நலம் முன்னேறி வருகிறார். அவருக்கு உயிரும் கையும் காப்பாற்றப்பட்ட நிலையில், இயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களுக்கு அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.