கோவை மாணவர்களின் கைவண்ணத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சி !
கோவை, சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாணவர்கள் கைவண்ணத்தில் உருவாக்கிய விநாயகர் சிலைகள் கண்காட்சி நடைபெற்றது.;
கோவை, சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாணவர்கள் கைவண்ணத்தில் உருவாக்கிய விநாயகர் சிலைகள் கண்காட்சி நடைபெற்றது. கணினி விநாயகர், ஏ.ஐ. விநாயகர், பல்வாமா ராணுவ விநாயகர், காய்கறி விநாயகர், நவதானிய விநாயகர், சாக்லேட் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு புதுமையான சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. மாணவர்களின் படைப்புகள் அனைவரையும் கவர, வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும், விநாயகர் சல்சா நடனமும் இடம்பெற்று மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தின. பாரம்பரியமும், நவீன தொழில்நுட்பமும் இணைந்த மாணவர்களின் புதுமையான கைவண்ணம் கண்காட்சியில் சிறப்பாகத் திகழ்ந்தது.