சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை !
7 மாதங்களில் விசாரணை நிறைவு – சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்ற உத்தரவு.;
பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி மாறன் (58) மீது, கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு ஜனவரி 11-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு, 7 மாதங்களில் விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பாக புலனாய்வு நடத்திய போலீசாரை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் பாராட்டினார்.