தஞ்சாவூரில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பேரவைக்கூட்டம்

பேரவைக்கூட்டம்;

Update: 2025-08-27 14:40 GMT
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தஞ்சாவூர் வட்டக்கிளையின், 10 - ஆவது ஆண்டு பேரவை தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் கோட்டச் செயலாளர் சி.கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.மேகநாதன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர்  வி.காமராஜ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ஜி.பஷீர் பேரவையை துவக்கி வைத்துப் பேசினார்.  வேலை அறிக்கையை செயலாளர் டி. கோவிந்தராஜு, வரவு செலவு அறிக்கையை பொருளாளர் எம்.முனியாண்டி முன்மொழிந்து பேசினர்.  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தஞ்சாவூர் வட்டக் கிளையின் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல் ராஜ், செயலாளர் பி.காணிக்கராஜ், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.கலியமூர்த்தி, சிஐடியு  மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக, நல அமைப்பின் மாநில செயலாளர் முகவை கி. பெருமாள் சிறப்புரையாற்றினார். ஏ.ராஜப்பா நன்றி கூறினார். பேரவையில் ஐந்து பெண்கள் உட்பட 63 பேர்கள் கலந்து கொண்டனர்.  அமைப்பின் புதிய மாவட்ட தலைவராக ஏ.ராஜப்பா, செயலாளராக டி.கோவிந்தராஜு, பொருளாளராக எம்.முனியாண்டி மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள், மாவட்ட இணை செயலாளர்களாக தலா 7 பேர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.  பேரவையில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில், அடுத்த மாதம் 6, 7 ஆகிய தேதிகளில் தஞ்சையில் நடைபெற உள்ள சிஐடியு 16 ஆவது மாவட்ட மாநாட்டு நிதியாக ரூபாய் 20,000 வழங்கப்பட்டது. "மின்துறையை தனியார் மயமாக்கக்கூடாது.   பழைய பென்சன் திட்டத்தை அறிவித்திட வேண்டும்.  மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை வாரியமே ஏற்று நடத்த வேண்டும். 12 .4.24 அன்று ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Similar News