பேராவூரணி அருகே சாலை அமைக்கும் பணி துவக்கம் 

சாலைப்பணி;

Update: 2025-08-27 14:46 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் களத்தூர் - பழைய நகரம் இணைப்பு பனையவயல் வழியாக புதிதாக கப்பிச் சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். தி.மு.க பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், செல்வேந்திரன், ராமராஜ், கோபிநாத், கார்த்திக் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

Similar News