விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் வடுகன்தாங்கல் அருகிலுள்ள பில்லாந்திப்பட்டு கிராமத்தில், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 200 அடி உயர விநாயகர் சிலையை வைத்தனர். விநாயகருக்கு கண் திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.