மூதாட்டி மாயம்

குமாரபாளையம் அருகே மூதாட்டி மாயமானார்;

Update: 2025-08-27 15:15 GMT
. குமாரபாளையம் அருகே சத்யா நகரில் வசிப்பவர் முனியம்மாள், 65. இவர் நேற்றுமுன்தினம் வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு சென்று விட்டு மதியம் 12:00 மணியளவில் திரும்ப வந்து பார்த்த போது, வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இவரது மகன் நடராஜன், 52, குமாரபாளையம் போலீசில் தன் அம்மாவை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு கொடுத்து உள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து , காணாமல் போன முனியம்மாவை தேடி வருகிறார்கள். இவருக்கு ஞாபக மறதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News