மது போதையில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது.

மது போதையில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன்கைது.;

Update: 2025-08-28 02:09 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள நரிமேடு பகுதியை சோ்ந்தவா் விஜயலட்சுமி (38). இவருடைய மகள் வேடியம்மாளின் (19) கணவா் ஐயப்பன் (30) மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு வந்துள்ளது. இந்நிலையில், மது போதையில் வீட்டிற்கு வந்த ஐயப்பன் தனது மனைவி மற்றும் மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த ஐயப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயலட்சுமியை கத்தியால் குத்தி உள்ளாா்.இதில் வயிற்றில் பலத்த காயமடைந்த விஜயலட்சுமியை அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டினம் போலீசாா் வழக்கு பதிந்து, ஐயப்பனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News