நெல்லை மாவட்டம் கீழக்கல்லூர் அருள்மிகு சிதம்பர விநாயகர் திருக்கோவிலில் புதிதாக விநாயகர் சிலை நேற்று நிறுவப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் நாளில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.இதில் அதிமுகவினர், பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.