விவேகானந்த கேந்திராவில் விநாயகர் சதுர்த்தி விழா

கன்னியாகுமரி;

Update: 2025-08-28 03:06 GMT
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஏகாட்சர மகா கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  10-ம் நாள் திருவிழாவான நேற்று விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.   இரவு 7 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா நடந்தது.  அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் விநாயகருக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபடுகின்றனர இன்று (வியாழக்கிழமை) காலையில் விவேகானந்தபுரம் கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

Similar News