ஒசூா் அருகே சாலையை கடக்கும் ஒற்றை யானை.
ஒசூா் அருகே சாலையை கடக்கும் ஒற்றை யானை.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூரை அடுத்த சானமாவு வனப்பகுதியில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். இந்த நிலையில் நேற்று முன்தினம் பேரண்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒற்றை யானை கடந்துசென்றது. இதனால், அவ்வழியாக சென்ற வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டன. மேலும் சானமாவு வனப்பகுதியில் ஒற்றை யானை சுற்றி வருவதால் விவசாய நிலத்தில் காவலுக்குச் செல்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.