போச்சம்பள்ளி பகுதிகளில் தேங்காய் விற்பனை சுறு சுறுப்பு.
போச்சம்பள்ளி பகுதிகளில் தேங்காய் விற்பனை சுறு சுறுப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் 15 லட்சத்துக்கு மேலாக தென்னை மரங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய்கள் அதிகளவில் ருசியாக உள்ளதால் தமிழ் நாட்டில் பல மாவட்டங்கள், மட்டுமிற்றி அண்டை மாநிலங்களில் போச்சம்பள்ளி தேங்காய்களை மக்கள் விருப்பி வாங்குகின்றனர். அந்த நிலையில் தொடர்ந்து பண்டிகைள் வருவதால் இதனால் குமேனஅள்ளி, புலியூர், அரசம்பட்டி, மஞ்சமேடு உள்ளிட்ட பல் வேறு பகுதிகயில் தேங்காய் உரிக்கும் பணியில் தெழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 1 டன் ரூ 63 ஆயிரம் விற்பனை செய்பட்ட நிலையில் தற்போது 1 டன் 68 ஆயிரம் ரூபாய் விற்கப்படுகிறது. அந்த விலை மேலும் உயரும் என்று வியபாரிகள் தெரிவித்தனர்.