அத்தாளநல்லூர் ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்;
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி யூனியனுக்கு உட்பட்ட திருப்புடைமருதூர் அத்தாளநல்லூர் ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை யூனியன் துணை தலைவர் மாரி வண்ணமுத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முத்துப்பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், பாலசுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.