கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் சோதனை !

கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பு.;

Update: 2025-08-28 06:49 GMT
கோவை சித்ரா அருகே உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேற்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விடுமுறை என்பதால் ஊழியர்கள் யாரும் வராத நிலையில், பீளமேடு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் கலெக்டர் அலுவலகத்துக்கும் இதேபோன்ற மிரட்டல் வந்த நிலையில், மீண்டும் அனுப்பப்பட்ட இ-மெயில் போலீசாருக்கு சவாலாக அமைந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News