சாலை அகலப்படுத்தும் பணி நில ஆர்ஜிதம் குறித்து ஆய்வுக் கூட்டம்
முத்தூர் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு நில ஆர்ஜிதம் தொடர்பாக நில உரிமையாளர்கள், அதிகாரிகள் கூட்டம் வெள்ளகோயில் உட்கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது;
முத்தூர் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு நில ஆர்ஜிதம் தொடர்பாக நில உரிமையாளர்கள்- அதிகாரிகள் கூட்டம் வெள்ளகோவில் உட்கோட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கோவை நெடுஞ்சாலைகள் (நில எடுப்பு) மாவட்ட வருவாய் தனி அலுவலர் செந்தில் வடிவு தலைமை தாங்கினார். துணை கலெக்டர் ஜெகநாதன், வெள்ளகோவில் உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சத்திய பிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முத்தூர்-ஊடையம் சாலையில் முத்தூரிலிருந்து இ.பி.நகர் மலையாத்தாபாளையம், குண்டுபுளிகாடு வழியாக சென்னாக்கல்மேடு வரை 3 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைஅகலப்படுத்துதல் மற்றும் சாலை சந்திப்பு மேம்பாடு செய்யும் பணிகள் தொடங்க உள்ளது. இதற்காக சாலையின் இருபுறமும் நிலம் கையகப்படுத்த உள்ளது. கூட்டத்தில் சின்னமுத்தூர், வேலம்பாளையம், மங்கலப்பட்டி, ஊடையம் வருவாய் கிராமங்களை சேர்ந்த நில உரிமையாளர் கலந்து கொண்டனர்.நில உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.