தோரணக்கல்பட்டி-டூ வீலர் மீது டாரஸ் லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.
தோரணக்கல்பட்டி- டூ வீலர் மீது டாரஸ் லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.;
தோரணக்கல்பட்டி- டூ வீலர் மீது டாரஸ் லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே ஜல்லிபட்டிபகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் மகன் வடிவேல் வயது வயது 21 . இவர் கரூர் அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி 3-ம் வருடம் படித்து வந்தார், புதன்கிழமை கரூர்- திருச்சி சாலையில் வடிவேல் அவரது உறவினர் பழனிச்சாமி என்பவருடன் டூவீலரில் சென்றார். இவரது வாகனம் தோரணக்கல்பட்டி அருகே சர்வீஸ் சாலை அருகே வந்த போது, அதே சாலையில் பின்னால் வந்த ஒரு டாரஸ் லாரி டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் டூவீலரை ஓட்டிய வடிவேல் தலையில் பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த வடிவேலின் தந்தை வெள்ளையன் அளித்த புகாரில் தாந்தோணி மலை காவல்துறையினர் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.