திருப்பரங்குன்றத்தில் மணமக்களுக்கு அறிவுரை கூறிய போலீசார்

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று மட்டும் 150 திருமணங்கள் நடைபெற்றன.;

Update: 2025-08-28 07:02 GMT
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நேற்று (ஆக.27) மட்டும் 150 க்கு மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் பிரேம்குமார் மணமக்கள் ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழ வேண்டும். பெற்றோர்களை கடைசிவரை பாதுகாக்க வேண்டும். தங்களின் எந்த ஒரு பிரச்சனையும் மனம் விட்டு பேசி தீர்க்க வேண்டும் என காவல்துறை சார்பாக அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் வியப்பில் அசத்தினார்.

Similar News