திருமங்கலம் அருகே வேகத்திடையில் கருமாரி விழுந்தவர் பலி
மதுரை திருமங்கலம் அருகே வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்தவர் பலியானார்;
மதுரை திருமங்கலம் முகமது அலி தெருவில் வசிக்கும் நஜீம் மைதீனின் மகன் காதர் மைதீன்(41) என்பவர் நேற்று முன்தினம் (ஆக.26) இரவு 10 மணி அளவில் திருமங்கலத்திலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் ஆலம்பட்டி முகில் கார்டன் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது அங்கிருந்த வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிர் இழந்தார்.இது குறித்து அவரது மனைவி திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.