சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு உயிரிழந்த டிரைவர்
மதுரை மேலூர் அருகே திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது;
கன்னியாகுமரி மாவட்டம் தலகுளம் வள்ளி வாரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால்(60) என்பவர் நாகர்கோவிலிருந்து முந்திரி லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இன்று (ஆக.27) அதிகாலை நள்ளிரவு 2 மணி அளவில் மதுரை திருச்சி நான்கு வழி சாலை மேலூர் அருகே உள்ள மலம்பட்டிக்கு வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு லாரியை சாலையோரமாக நிறுத்தி மயங்கி லாரியிலேயே சரிந்துள்ளார். இதையறிந்த வந்த போலீசார் பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் இருந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.