தேர்நிலை திடலில் ராஜ கணபதி – கோலாலம்பூர் கோவில் முகப்பை ஒத்திருக்கும் அலங்காரம், பக்தர்கள் பெரும் வரவேற்பு !

கோவையில் விநாயகர் சதுர்த்தி : கோலாலம்பூர் கோவில் முகப்பு, ஆறுபடை வீடுகள் வடிவமைப்பில் ராஜ கணபதி அலங்காரம்.;

Update: 2025-08-28 07:11 GMT
விநாயகர் சதுர்த்தி அனைத்து பகுதிகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர் நிலைத்திடல் பகுதியில் கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோவில் முகப்பு போன்று அமைத்து இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் உட்புறத்தில் இரு புறமும் முருகனின் ஆறுபடை வீடுகள், 10 அடி உயர ராஜ கணபதி விநாயகர் சிலைக்கு இருபுறமும் கோவையின் காவல் தெய்வங்களாக விளங்கும் கோனியம்மன் தண்டுமாரியம்மன் படங்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கரிப்பு அங்கு வரும் அனைத்து பக்தர்களையும் வெகுவாக கவர்ந்தது.

Similar News