சோழவந்தான் அருகே பிளஸ் ஒன் மாணவி மாயம்
மதுரை சோழவந்தான் அருகே பிளஸ் ஒன் மாணவி மாயமென புகார் அளிக்கப்பட்டுள்ளது;
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆலங்கொட்டாரம் பகுதியில் வசிக்கும் சின்னச்சாமியின் 15 வயது மகள் ஆலங்கொட்டாரம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (ஆக.26) இரவு 7 மணியில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை நேற்று (ஆக.27)மதியம் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.