உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் ஆட்சியர் தங்கவேல்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் ஆட்சியர் தங்கவேல்.;
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் ஆட்சியர் தங்கவேல். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 44வது வார்டு பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்காக தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று கரூர் அரசு கலைக்கல்லூரி கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துணை மேயர் தாரணி சரவணன் மண்டல தலைவர் கனகராஜ் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பயனாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்று தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.