ஆலயத்தில் பலியான தவெக தொண்டர்
மதுரை கொட்டாம்பட்டி அருகே சாலை விபத்தில் பலியானவர் தவெக தொண்டர் என அடையாளம் தெரிந்தது.;
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி சூரப்பட்டி புதூர் விலக்கு அருகே அடையாளம் தெரியாத வாகன மோதியதில் ஒருவர் இறந்து கிடப்பதாக கொட்டாம்பட்டி போலீசாருக்கு சூரப்பட்டி விஏஓ அழகு ராஜன் புகார் அளித்திருந்தார். போலீசாரின் விசாரணையில் இறந்தவர் வேலூர் கஸ்பாவை சேர்ந்த மாதவன் வயது 49 என்பதும் இவர் மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பங்கேற்க வந்தவர் என தெரிந்தது. போலீசார் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.