பெண் டாக்டரிடம் நகை பறிப்பு வாலிபர் கைது
முகவரி கேட்பது போல் நடித்து பெண் டாக்டரிடம் நகை பறிப்பு வாலிபர் கைது;
தாராபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் சவுமியா. நேற்று, இவர் பொன்னாபுரம் சென்று விட்டு, தாராபுரம் நோக்கி ஸ்கூட்டரில் வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சவுமியாவிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.பின்னர் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தங்க சங்கிலி பறித்த நபர்கள் வெள்ளகோவில் பகுதியில் செல்வது தெரிய வந்தது. இதற்கிடையில் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் திடீ ரென்று, விபத்தில் சிக்கியதால், இருவரும் காயம் அடைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது காயம் அடைந்த ஒருவர் மட்டும் அங்கு கிடந்தார். மற்றொருவர் தப்பி சென்று விட் டார். மேலும் இவர்தான் தாராபுரம் அருகே பெண் டாக்டரிடம் சங்கிலியை பறித்தது என அவர் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கொண்டு கண்டறியப்பட்டது. விசாரணையில் அவர், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் (வயது 24) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.