கால்பந்து போட்டி நிறைவு விழா: முன்னாள் இந்திய வீர்ர் ஐ.எம்.விஜயன் பங்கேற்பு!
தூத்துக்குடியில் நடைபெற்ற கால்பந்து போட்டி நிறைவு விழாவில் முன்னாள் இந்திய கால்பந்து வீர்ர் ஐ.எம்.விஜயன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.;
தூத்துக்குடியில் நடைபெற்ற கால்பந்து போட்டி நிறைவு விழாவில் முன்னாள் இந்திய கால்பந்து வீர்ர் ஐ.எம்.விஜயன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். ஐ.பி.எல் முறையில் வீர்ர்களை ஏலமுறையில் எடுத்து விளையாடும் யங் லயன்ஸ் லா லீகா போட்டிகள் மூன்றாவது ஆண்டாக தூத்துக்குடியில் மூன்றாவது ஆண்டாக நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் அத்லெடிக்கொ மினி அணியை வென்று பாரிஸ் செயிண்ட் ஜார்ஜ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் நிறைவு விழாவில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் பத்மஶ்ரீ டாக்டர் ஐ.எம்.விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும் வீர்ர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் அன்னை கேஸ் ஏஜென்சி உரிமையாளர் பொன்சிங், தூத்துக்குடி மாவட்ட கால்பந்தாட்ட அமைப்பின் துணை செயலாளர் நிக்கோலஸ், லூமி மெடிக்கல் சென்டர் உரிமையாளர் ரூபஸ், அலாய் ஆர்த்தோ மையம் டாக்டர் பிரபு அலாய் மற்றும் ரகு சீபுட்ஸ் உரிமையாளர் உதயகுமார் கலந்து கொண்டணர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை யங் லயன்ஸ் கால்பந்து கழக இளைஞர்கள் செய்திருந்தனர்.