விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தி நாளையொட்டி குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.;
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று துவங்கியது. குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் கொலு வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்து, 3,5,7 ஆகிய நாட்களுக்கு பிறகு, கொலு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் விட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் கொலு வைப்பதற்காக, சிறிய அளவிலான சிலைகள் முதல் பெரிய அளவிலான சிலைகள் வரை விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதி பக்தர்கள் எடுத்து சென்று, கொலு வைத்தனர். சுவாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. குமாரபாளையத்தில் ராஜகணபதி கோவில், பஸ் ஸ்டாண்ட் கற்பக விநாயகர் கோவில், நடன விநாயகர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் விநாயகர் கோவில் , கள்ளிபாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன