விநாயகர் சதுர்த்தி நாளில்விதைகள் தூவி நாற்று விடுதல் பணி துவக்கம்,
குமாரபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி நாளில் விதைகள் தூவி நாற்று விடுதல் பணி துவக்கப்பட்டது.;
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி நாளில் விவசாய நிலங்களில் உழுதல் பணி நடந்தது. இதையடுத்து விதைகள் தூவி நாற்று விடுதல் பணி துவக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி விவசாயி விஸ்வநாதன் கூறுவதாவது: விநாயகர் சதுர்த்தி நாளில் விவசாய நிலங்களில் மாடுகளில் ஏர் பூட்டியும், டிராக்டர் கொண்டும் உழுதல் பணி நடந்தது. சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ள இந்த பகுதியில், குறிபிட்ட ஒரு பகுதியில் நாற்றுகளுக்காக விதை நெல் தூவப்பட்டது. சில நாட்களில் இவைகள் வளர்ந்து நாற்றுக்கள் ஆகும். இதனை பறித்து, விவசாய நிலங்களில் நாற்றுகள் இடைவெளி விட்டு நடப்படும். விதை நெல் தூவும் போது, விதை நெல் மற்றும் நாற்று விடும் நிலத்திற்கு தீபாராதனை காட்டப்படும். தெய்வ பணியாக தான் இந்த நாற்று விடும் பணி, உள்ளிட்ட விவசாய பணிகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.