கோவை: நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் !
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் கோவையில் நாளை குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.;
கோவை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டம், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்குகிறார். இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை மனு மூலம் முன்வைக்கலாம். மேலும், அன்றைய தினம் வேளாண்மை உற்பத்தி குழு கூட்டமும் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.