கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா.
கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா.;
கிருஷ்ணகிரி அருகேயுள்ள சின்ன மோட்டூர் பகுதியில் எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவில் உள்ளூர் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றிருந்தது. ஒவ்வொரு எறுதாக வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடபட்டது. வெற்றி பெற்ற எறுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு களித்தனர்.