தூத்துக்குடியில் அருணா கார்டியாக் கேர் திறப்பு விழா
தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த இருதய சிகிச்சை அளிக்கும் அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை துவக்க விழா நடைபெற்றது.;
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் உழவர் சந்தை அருகே புதிதாக அருணா கார்டியக் கேர் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் கேத்லேப், ஐசியூ, ஐஎம்சியு, எக்கோ, டிஎம்டி, இசிஜி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை திறப்பு விழா இன்று நடைபெற்றது. மருத்துவமனையை பெருங்குளம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்திய ஞான தேசிய பரமாச்சார்ய சுவாமிகள், தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றினர். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் அருணா கார்டியாக் கேர் மருத்துவர்கள் டாக்டர் அருணாச்சலம், டாக்டர் சொர்ணலதா ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து சிறப்பு சிகிச்சை பிரிவை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஜெபம் செய்து ஆசி வழங்கினார். கேத் லேபை டாக்டர்.மாரிமுத்து அவர்களும், ஐ எம் சி பிரிவை வஉசி கல்விக் கழக செயலாளர் ஏபிசிபி சொக்கலிங்கம், ஆய்வகத்தை அஇஅதிமுக பிரமுகர் சரவணப் பெருமாள், மற்றொரு ஆய்வகத்தை தொழிலதிபர் டி.ஏ.தெய்வநாயகம் ஆகியோர் திறந்து வைத்தனர். தமிழ்நாடு சைவ வேளாளர் பேரவை மாநில தலைவர் ஏ.ஆர். லட்சுமணன், வஉசி நற்பணி மன்றத்தை சார்ந்தவர்கள், பல்வேறு மருத்துவமனையை சார்ந்த ஏராளமான மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டிக், பேஸ் மேக்கர், வாழ்விலோ பிளாஸ்டி, லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி, குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை, நுண்துளை பைபாஸ் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் 24 மணி நேரமும் அளிக்கப்படும் என மருத்துவமனை இயக்குனர்கள் தெரிவித்தனர்.