மருதங்கோடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 

விளவங்கோடு;

Update: 2025-08-28 12:45 GMT
குமரி மாவட்டம்  விளவங்கோடு வட்டம், மருதங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கழுவன்திட்டை புனித மார்டின் டி போரஸ் தேவாலய திருமண மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகம் நடந்தது. கலெக்டர் அழகு மீனா  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  விண்ணப்பித்த தகுதிவாய்ந்த விண்ணபங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  தொடர்ந்து குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் உதவி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு விண்ணப்பித்த  தகுதி வாய்ந்த விண்ணபதாரர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது.  நடைபெற்ற ஆய்வில் இணைப்பதிவாளர் (கூட்டுறவு) சிவகாமி, வட்டாட்சியர் வயோலா பாய் (விளவங்கோடு), துறை அலுவலர்கள். பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்

Similar News