தாய்லாந்து நாட்டில், ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய மாணவிக்கு வரவேற்பு
வரவேற்பு;
தாய்லாந்தில் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்று திரும்பிய தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தரணிஸ்ரீக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கி நாடுகள் சபை அமைப்பின் சார்பில் தாய்லாந்தில் பன்னாட்டு மாணவர்கள் மாநாடு நடந்தது. இதில் இந்தியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து பள்ளி மாணவர்களும் 62 நாடுகளில் இருந்து 600 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் பன்னாட்டு வளர்ச்சி குறித்து நடைபெற்ற இம் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் 6 மாணவர்கள்கள் பங்கேற்றனர். இதில் தஞ்சை மாவட்டம் வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி தரணி ஸ்ரீயும் ஒருவர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு UNDP ( United Nation Development Program) மூலம் பிராண்ட் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டில் கலந்து கொண்டு வல்லம் திரும்யி மாணவி தரணிஸ்ரீயை ஆசிரியர்கள், திமுக முன்னாள் மற்றும் இந்நாள் ஒன்றிய செயலாளர்கள், வல்லம் பேரூராட்சித்தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் தஞ்சையில் நடந்த ஆரோகன் என்ற கலை நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் வென்று முதல் பரிசான ரூ.32000 மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு மெஷினை பெற்று வந்த வல்லம் பள்ளி 65 மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாணிக்கம் நன்றி கூறினார்.