தஞ்சாவூரில் விபத்தில் முதியவர் பலி 

விபத்து;

Update: 2025-08-28 13:13 GMT
தஞ்சாவூர் அருகே, சைக்கிளுடன் சாலையை கடக்க முயன்ற முதியவர் பைக் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். தஞ்சை ஆர்.எம்.எஸ்.காலனி ரயில் நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (72). தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 26 ஆம் தேதி இரவு பன்னீர்செல்வம் வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் தனது சைக்கிளுடன் சாலையை கடக்க முற்பட்டார். அப்போது எதிர்திசையில் நாஞ்சிக்கோட்டை சாலை அன்னை சத்யா நகரை சேர்ந்த ரவிக்குமார் (40) என்பவர் ஓட்டி வந்த பைக் பன்னீர்செல்வம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பன்னீர்செல்வம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.. இதுகுறித்த தகவலின் பேரில், தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பன்னீர்செல்வத்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து இறந்த பன்னீர்செல்வத்தின் மனைவி தேன்மொழி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News