விமான பயணிகளின் பணத்தை திருப்பி கொடுத்த நிறுவனம்
மதுரையில் விமான பயணிகளின் பணத்தை விமான நிறுவனம் திருப்பி கொடுத்தது.;
மதுரையில் இருந்து துபாய் புறப்பட தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகளின்றி மாலை 4.50 மணிக்கு மும்பை புறப்பட்டு சென்றது. பயணிகளுக்கு முழு கட்டணம் திருப்பி செலுத்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் உறுதியளித்தது. மீண்டும் துபாய் செல்ல விரும்பும் பயணிகள் நாளை துபாயிலிருந்து வரும் விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்தது.