ராசிபுரம் அருகே நில தகராறு அண்ணனின் காதை கடித்த தம்பியால் பரபரப்பு...

ராசிபுரம் அருகே நில தகராறு அண்ணனின் காதை கடித்த தம்பியால் பரபரப்பு...;

Update: 2025-08-28 15:06 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வேம்பாகவுண்டம் புதூர் பகுதியை சேர்ந்தவர் செங்கம்மலை(55) கூலி வேலைகளை செய்து வரும் நிலையில் செங்கம்மலைக்கு உடன் பிறந்த 2 அண்ணன்,1 தம்பி உள்ள நிலையில் இவர்களுக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. செங்கம்மலைக்கு திருமணமாகாததால் தனியாக வசித்து வருகிறார்.இவரது தம்பி ஆறுமுகம் என்பவர் உனக்கு திருமணம் ஆகவில்லையே உனக்கு வர வேண்டிய நிலத்தை எனது பெயரில் எழுதி வை என தொடர்ந்து செங்கம்மலையை வற்புறுத்தி வந்தார். அதற்கு செங்கம்மலை மறுப்பு தெரிவித்த நிலையில் அப்போது சாலையில் நடந்து சென்ற செங்கம்மலையின் காதை அவரது தம்பி ஆறுமுகம் கடித்து உள்ளார்.பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சம்பவம் தொடர்பாக மங்களபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Similar News