போச்சம்பள்ளி அருகே தொழிலாளி தற்கொலை.

போச்சம்பள்ளி அருகே தொழிலாளி தற்கொலை.;

Update: 2025-08-29 01:53 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சபள்ளி அருகே பாரூர் அடுத்த வாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (24) தொழிலாளி. இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் அரவிந்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி அன்று இவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீட்டிற்கு சென்றவுடன் தூக்கிட்டு தற்கெலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News