ஊத்தங்கரை அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு.
ஊத்தங்கரை அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு.;
ஊத்தங்கரை அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு. கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் வசந்தா (52) கூலித்தொழிலாளியான. இவர் நேற்று முன்தினம் இரவு பாம்பாறு டேம் பேருந்து நிறுத்தம் அருகே ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலை சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் வசந்தா மீது எதிர்பாரவிதமாக மோதியதில் அவர் படுகாயம் அடைந்து அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் வசந்தாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஊத்தங்கரை அரசு அருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.