கொசு தொல்லையால் ஒருவர் படுகொலை

மதுரை விளாச்சேரியில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.;

Update: 2025-08-29 05:46 GMT
மதுரை விளாச்சேரி அருகே மொட்டைமலை பகுதியைச் சேர்ந்த தவசி தேவர் மகன் பரமன்(40) என்பவருக்கும் இவரது வீட்டு அருகே தூரத்து உறவினரான கரன்( 28) என்பவர் குடியிருந்து வருகிறார். இவர்களுக்குள் சொத்து தகராறு உள்ள நிலையில் பரமன் வளர்க்கும் மாட்டின் கழிவு நீரால் கொசு தொல்லை செய்வதாக அடிக்கடி சண்டையிட்ட நிலையில் நேற்று (ஆக.28) இரவு ஏற்பட்ட தகராறில் கரண் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரமன் உயிரிழந்தார். தலைமறைவாக உள்ள கரணை திருநகர் போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News