பிளஸ் ஒன் மாணவி தூக்கிட்டு தற்கொலை

மதுரையை அருகே தாய் இறந்த இயக்கத்தில் பிளஸ் ஒன் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2025-08-29 05:55 GMT
மதுரை அலங்காநல்லுார் கல்லணை பகுதியில் வசிக்கும் பெயின்டர் மாரியப்பனின் மகள் மணிமேகலை( 15) என்பவர் கூடல் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்தார். ஓராண்டுக்கு முன் இவரது தாய் இறந்தார். சில மாதங்களாக விரக்தியுடன் காணப்பட்ட மணிமேகலை நேற்று (ஆக.28) காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அலங்காநல்லுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News